அரசியல் தமிழகம் இந்தியா

அ.ம.மு.க.வினர் செயலால் சோகமான அதிமுக! தேர்தலுக்கு முன்பே வெற்றி பெரும் அ.ம.மு.க!

Summary:

admk vs AMMK

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

இம்முறை உள்ளாட்சி தேர்தல் களத்தில் அதிமுக, திமுக அதன் கூட்டணி கட்சிகள், அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளது. அனைத்து கட்சிகளும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்தநிலையில் அ.ம.மு.க.வினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், தினகரனின் அ.ம.மு.க.வினர், பல இடங்களில் தேர்தலே வராமல் போட்டியாளர்களை அன்னப்போஸ்ட்டாக வெற்றிவாகை சூட முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தேர்தல் மின்னணு இயந்திரம் இல்லமல் நேரடி ஓட்டு சீட்டின் மூலம் தேர்ந்தெடுப்பதால் இந்த தேர்தல் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையே  அ.ம.மு.க.வினர் முதல் இலக்காக கருதுகின்றனர்.


Advertisement