தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! அமமுகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ.! என்ன காரணம்.?

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! அமமுகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ.! என்ன காரணம்.?



admk mla Join in AMMK

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக வெளியிட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் 177 தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.  இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அதிமுகவில் சீட்டு கிடைக்காததால் அமமுகவில் இணைந்தார் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன்.

Admk

முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திர பாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்துள்ளார்.