அரசியல் தமிழகம்

சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.! அதிமுக அமைச்சர் ஓப்பன் டாக்.!

Summary:

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடு

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக தொண்டர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி எந்த செயலையும் செய்யமாட்டார்கள். சசிகலா வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை.
 
சசிகலா சொத்துகள் முடக்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சசிகலா சொத்துகள் முடக்கபடுவது மத்திய அரசின் நடவடிக்கை. நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டது. ஆணைகள் பிறப்பிக்கபட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர். சசிகலா சொத்துகள் முடக்குவதில் அரசியல் கிடையாது என தெரிவித்தார்.


Advertisement