நள்ளிரவில் கொலைவெறி தாக்குதல்! ஏழையின் வீட்டை அடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி! புதுக்கோட்டை அரிமளம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

நள்ளிரவில் கொலைவெறி தாக்குதல்! ஏழையின் வீட்டை அடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி! புதுக்கோட்டை அரிமளம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசியல் பிரமுகர் ஒருவர் தனது அடியாட்கள் மூலமாக ஒரு அப்பாவியை தாக்கி, அவரது வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ராஜா என்பவரின் பட்டா வீட்டு இடம் இருந்துள்ளது. அவர் அங்கு ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த அரிமளம் அதிமுக பேரூர் கழக செயலாளர் அரிமளம் மாரியப்பன் என்பவர் அவரது உறவினருக்கு இந்த இடத்தை பல முறை கேட்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 27-7-2020 அன்று மாரியப்பன் உணவகத்திற்கு ராஜா என்பவரை வரவழைத்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ராஜாவை மாரியப்பன் மற்றும் அவரது அடியாட்கள் அயுதங்கள் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பல காயங்களுடன் ராஜா என்பவர் தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இது குறித்து புகார் தெரிவித்துளார். 

இந்நிலையில் அன்று நள்ளிரவில் ராஜாவை கொலை செய்யும் நோக்கத்துடன் மாரியப்பனின் அடியாட்கள் ராஜா வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜா மற்றும் குடும்பத்தினர் அங்கு இல்லாததால், வீட்டு முழுவதையும் அடித்து உடைத்து நாசம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தாெடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜா புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா சமயத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நிலையில் அரசியல் பிரமுகர்களும், அரசு ஊழியர்களும் பொதுமக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் அதிமுக நிர்வாகி மாரியப்பனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ராஜாவின் உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo