நடிகை கௌதமியின் பணமோசடி புகார் விவகாரம்; ஒருவர் அதிரடி கைது.!Actress Gowthami Complaint 1 Arrested about Land Forgery 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் தனக்கு சொந்தமான 8.63 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி, அதற்கான சட்டபூர்வ உரிமையை பெற்று தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக நடிகை கௌதமி சமீபத்தில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் அளித்தார். 

இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் கோட்டையூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமாக இருந்த நிலத்தினை ரூ. 20 கோடிக்கு விற்பனை செய்து, நடிகையிடம் மோசடியில் ஈடுபட்டு ரூ.4 கோடி மட்டுமே கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரில் பலராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரகுநாதனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.