அரசியல் தமிழகம் சினிமா

தமிழக அரசை பாராட்டித்தள்ளிய நடிகர் சூர்யா.! என்ன காரணம்.?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளதுடன் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் பலனடைவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்று நடிகர் சூர்யா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement