நடுரோட்டில் போலீசாரை அடித்து, கடித்த ரெளடி! வைரலாகும் வீடியோ!
நடுரோட்டில் போலீசாரை அடித்து, கடித்த ரெளடி! வைரலாகும் வீடியோ!

கள்ள சாராயம் காய்ச்சி விற்றவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்செல்லும் போது போலீசாரை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூ மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருவோணத்தில் கள்ளச் சாரயம் காய்ச்சி விற்கப்படுவதாக மது ஒழிப்புத் துறைக்கு கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த இளங்கோவன் மற்றும் அருண் பாண்டியன் என்பவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் போலீசார் அழைத்துச்செல்லும் வழியில் குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்றனர். குற்றவாளிகள் தாக்கினாலும் அவர்களை தப்பிக்க விடாமல் பிடித்து வைத்திருந்த காவலதிகாரியின் கைகளில் கடித்துவிட்டு குற்றவாளிகள் தப்பித்து சென்றுள்ளன்னர்.
இதில் தலைமைக் காவலர் செந்தில்குமார், மற்றும் ஆல்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். குற்றவாளிகள் போலீசாரை தாக்கும் காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.