தமிழகம்

இருசக்கர வாகனத்தை பின்புறமாக குத்தி தூக்கிய லாரி! சம்பவ இடத்திலேயே தந்தை மகன் உயிரிழப்பு!

Summary:

accident in pudukkottai


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள முதுகுளத்தை சேர்ந்த முருகையன் மற்றும் அவரது மகன் தர்மலிங்கம் இருவரும் கந்தர்வக்கோட்டையிலிருந்து தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்புறம் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாகனத்தின் மீது பலமாக மோதியதால் லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.

death க்கான பட முடிவு

அங்குநடந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கந்தர்வக்கோட்டை போலீசார் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த அந்த கோரவிபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement