தமிழகம்

அதி வேகமாக வந்த கார், டிரான்ஸ்பார்மரை குத்தி தூக்கியது! ஒரே ஒரு காரணத்தால் அனைவரும் உயிர்தப்பினர்!

Summary:

Accident in pudhukottai Alangudi


புதுக்கோட்டை மாவட்டம் அடுத்து உள்ள ஆலங்குடியில் கோர விபத்து ஒன்று நடந்துள்ளது அதில் பயணித்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாட்டில் இருந்து ஆலங்குடி நோக்கி செல்லும் சாலையில், மேலாத்தூர் மற்றும் சிக்கப்பட்டி இந்த ஊருக்கு இடையே உள்ள சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்தக் காரை புதுக்கோட்டையைச் சேர்ந்த பசீர் அஹமத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

 ஓட்டுநர் உடன் சேர்ந்து அந்த காரில் இரண்டு பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து பயணித்துள்ளனர். அவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. காரை வேகமாக ஓட்டி வந்த நிலையில் ஒரு திருப்பு முனையில் காரை வளைக்க முடியாமல் சாலையை தாண்டி உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரில் விட்டு மோதியுள்ளனர். 

கார் மோதியதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து கீழே சாய்ந்துள்ளது. காரில் பயணித்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், காரில் பயணம் செய்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

 விபத்து நடந்த சத்தம்கேட்டு சாலையில் சென்றவர்கள், கீழே இறங்கி சென்று காரில் உள்ளவர்களை மீட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். விபத்து குறித்து அப்பகுதியில் சென்ற மக்கள் கூறுகையில் இந்த விபத்து மிகவும் கோரமான முறையில் நடந்து உள்ளது. அதில் பயணித்த பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர் என தெரிவித்தனர். 


Advertisement