தமிழகம்

வெறிச்சோடி கிடந்த சாலை! அசோக் பில்லர் அருகே வேகமாக வந்த கார்! அடித்து தூக்கப்பட்ட இருசக்கர வாகனம்! துடிதுடித்த இருவர்!

Summary:

accident in ashok pillar

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 

இதனால் சென்னையில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன. சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் நேற்று வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தநிலையில் சென்னை அசோக் பில்லர் அருகே கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் சாலையில் இருந்து சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் சாலையை கடந்தபோது திடீரென வந்த கார் இருச்சக்கரவாகனத்தில் வந்த இருவரையும் அடித்து தூக்கி வீசியது. இருச்சக்கரவாகனத்தில் வந்த ஆன் மற்றும் பெண் அடித்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்து நடந்து சில மணி நேரத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.


Advertisement