தமிழகம்

நெருங்கி பழகிய கணவன் மனைவி! பக்கா பிளான் போட்டு 8 மாத ஆண் குழந்தை கடத்தல்!

Summary:

abducting 8monthold baby

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், செல்வரராணி என்ற தம்பதி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். செல்வராணிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில்  இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு  திருப்பூரை  சேர்ந்த  விக்னேஷ் பிரபாவதி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  செல்வம் -  செல்வராணி அவர்களின் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கோவை அரசு  மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த வெள்ளிகிழமை வந்துள்ளனர்.  அவர்களுடன் விக்னேஷ் பிரபாவதி  தம்பதியினரும் வந்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த போது செல்வமும், விக்னேசும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது  குழந்தையின் எடையை பரிசோதித்து வருவதாக  கூறி இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை  வாங்கிகொண்டு பிரபாவதி சென்றுள்ளார். அதே சமயத்தில், செல்வத்துடன் இருந்த விக்னேஷ்  முக்கியமான வேலை இருக்கின்றது வந்து விடுகின்றேன் என  கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை குழந்தையை பிரபாவதி கொண்டுவரவில்லை. 

இதனையடுத்து தங்களை  ஏமாற்றி குழந்தையை விக்னேஷ் பிரபாவதி தம்பதி கடத்தி சென்று இருப்பதை அறிந்தனர்.இதனைடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தனிப்படை  அமைத்து   விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து திருவாரூரில் குழந்தையுடன் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் பிரபாவதி ஆகியோரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.


Advertisement