தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வளர்ப்பு நாயுடன் தூக்கில் தொங்கிய நபர் : 4 நாட்களாக அழுகி தொங்கிய சடலம்.. ஆரணியில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
ஆரணி அருகே மனைவி இறந்த துக்கத்தில் 50 வயது நபர் வளர்ப்பு நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசபாளையம், சின்ன சாயக்கார தெருவில் பட்டு சேலை வியாபாரம் செய்து வருபவர் பாஸ்கர். இவரது வீட்டின் முதல் மாடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜ் (வயது 50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
துணி தைக்கும் டெய்லராக பணியாற்றி வரும் ராஜின் மனைவி சென்னையில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக தான் வசித்து வந்த வீட்டு அறையின் சுவற்றில், "சென்னையில் இருக்கும் தனது மனைவி இறந்து விட்டால், இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை" என ஆங்கிலத்தில் எழுதி வைத்துவிட்டு ஆசையாக தன்னுடன் வளர்த்து வந்த நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் யாருக்கும் தெரியவில்லை. 4 நாட்களாக உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இது குறித்த எந்த தகவலையும் அறியாத வீட்டின் உரிமையாளர், மாதம் பிறந்துவிட்டது என்பதால் 7-ம் தேதியான நேற்று வாடகை வசூலிக்க மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி காவல்துறையினர், கதவை திறந்து உள்ளே சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது.
இதனையடுத்து, ராஜ் மற்றும் நாயின் உடலை மீட்ட அதிகாரிகள், ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.