காதலனை ஆசை ஆசையாக மணமுடித்த இளம்பெண்..5 மாதங்களில் எடுத்த விபரீத முடிவு.. கதறும் உறவினர்கள்.!

காதலனை ஆசை ஆசையாக மணமுடித்த இளம்பெண்..5 மாதங்களில் எடுத்த விபரீத முடிவு.. கதறும் உறவினர்கள்.!


A young girl who married her lover on a whim.. A tragic decision made in 5 months.. Screaming relatives.!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில் கொடி ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருக்கு மனோஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கடையில் வேலை செய்யும் குடவாசல் அடுத்த புதுக்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சசி பிரியா என்பவருடன் மனோஜிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சத்தம் கேட்டதையடுத்து மனோஜின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

Newly married women

அப்போது சசி பிரியா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட சசி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சசி பிரியாவின் பெற்றோர் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.