கணவன் செய்த காரியத்தால் மனமுடைந்த மனைவி!.. தூக்கில் தொங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!

கணவன் செய்த காரியத்தால் மனமுடைந்த மனைவி!.. தூக்கில் தொங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!


A wife upset because of what her husband did

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார பாலசுதர்சன் (45). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மில் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34). இந்த நிலையில், பாலசுதர்சனுக்கும், சாமுண்ட்டீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக, சாமுண்டீஸ்வரி மன உளைச்சல் அடைந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பாலசுதர்சன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதன் பின்னர், வீட்டில் தனியாக இருந்த சாமுண்டீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிறுவனத்தில் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பாலசுதர்சன், தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாமுண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சாமுண்டீஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.