நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கன்னியாகுமரியில் பரபரப்பு புகார்.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கன்னியாகுமரியில் பரபரப்பு புகார்.!


a-sensational-complaint-in-kanyakumari-against-the-chie-NT4FHR

நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசியதை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரங்களுக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தான் நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு காரணம் எனவும் அவர்கள் தான் சாத்தானின் பிள்ளைகள் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள்  வந்தன.

tamilnaduஇந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக  சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

tamilnadu

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான்  அவ்வாறு பேசவில்லை எனவும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்  திமுக மற்றும் காங்கிரசிற்கு வாக்களித்ததை தான் அப்படி குறிப்பிட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.