புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஒரு தலை காதல் விவகாரம்.. ஆட்டை அறுப்பது போல் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய் மாமன்..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் பெருமாள் - ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களுக்கு ஜீவிதா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் அங்குள்ள பர்கூர் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயப்பிரதாவின் சகோதரர் சரண்ராஜ் என்பவர் ஜீவிதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் ஜெயப்பிரதாவிடம் சரண்ராஜ் ஜீவிதாவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய சரண்ராஜ்க்கு மகளை திருமணம் செய்து வைக்க ஜெயப்பிரதாவிற்கு விருப்பமில்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய ஜீவிதாவை பாட்டி வீட்டிற்கு போகலாம் என்று நைசாக பேசி அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜீவிதாவின் கொலைக்கு காரணமான சரண்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.