பெரும் சோகம்..மிதிவண்டியில் சென்ற முதியவர் கார் மோதி பலி..!



A great tragedy..an old man who was riding a bicycle was hit by a car and died..!

விக்கிரவாண்டி முட்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துகுமரன்(60). இவர் சம்பவத்தன்று செஞ்சி - விழுப்புரம் சாலையில் தனது மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்ததுள்ளார்.

அப்போது முத்துகுமரன் கஞ்சனூா் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முத்துகுமரனின் மிதிவண்டி மீது மோதியுள்ளது. இதனால் முத்துகுமரன் நிலை தடுமாறி மிதி வண்டியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துகுமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

accident

இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்துகுமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய திண்டிவனம் பிரம்மதேசத்தை சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.