பெரும் சோகம்.. திருமணமாகி ஒன்றரை மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட புதுப்பெண்.. கதறி துடித்த கணவன்..!

பெரும் சோகம்.. திருமணமாகி ஒன்றரை மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட புதுப்பெண்.. கதறி துடித்த கணவன்..!


A great tragedy.. A bride who took her own life after one and a half months of marriage.. Her husband was crying..!

குமரி மாவட்டம் கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவருடன் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காயத்ரி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஹோட்டல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி துடித்துள்ளார்.

Newly married women

பின்னர் அவரது அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காயத்ரியின் இறப்பு கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.