கொடூரத்தின் உச்சம்... மகளின் கர்ப்பத்திற்கு காரணமான காம கொடூர தந்தை... 7 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்த காவல்துறை.!a-father-who-made-pregnant-her-daughter-was-arrested-af

திருச்சிலால் குடிய அருகே சொந்த மகளையே கர்ப்பம் ஆக்கிய கொடூர தந்தையை  காவல்துறையினர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  42 வயது கொத்தனார் க்கு 14 வயதில் மகள் இருக்கிறாள். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில்  தனது மகளை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறாள்.tamilnaduஇந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது . இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்  சிறுமியின் தந்தை தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான தந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

tamilnaduகாவல்துறையின் ஏழு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு தலைமறைவாக இருந்த கொத்தனாரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் தந்தையே மகளின் கர்ப்பத்திற்கு காரணமான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.