அடக்கொடுமையே!! குடும்பத் தகராறில் மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்ற கொடூர தந்தை...!

அடக்கொடுமையே!! குடும்பத் தகராறில் மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்ற கொடூர தந்தை...!A cruel father killed 4 children including his wife in a family dispute...!

திருவண்ணாமலை மாவட்டம் ஒரநந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனி - வள்ளி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். பழனி அன்றாடம் கூலி வேலை செய்து வருபவர்.

இந்நிலையில்தான் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று தம்பதி இருவருக்கும் குடும்ப தகராறு அதிகரிக்கவே ஆத்திரத்தில் இருந்த பழனி தனது மனைவி வள்ளி மற்றும் குழந்தைகள் நான்கு பேரையும் வெட்டிக்கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Cruel father

 மேலும் படுக்காயங்களுடன் மீட்க்கப்பட்ட பழனியின் 9 வயது மகள் பூமிகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா உயிரிழந்தார். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.