தமிழகம்

3 அடி நீளம், 1 அடி அகலம்! மீன் தொட்டிக்குள் 8 நிமிடம் 9 வயது சிறுமி செய்த சாதனை!குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

9 years old girl yoga in fish tang

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - பார்வதி தம்பதி. இவர்களது மகள் பெயர் முஜிதா. 9 வயதாகும் சிறுமி முஜிதா 4 ஆம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவயதில் இருந்தே முஜிதாவிற்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது.

விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட முஜிதா யோகா பயின்றுள்ளார். இந்நிலையில் தான் பயின்ற யோகாவை வைத்து சாதனை படைக்க நினைத்த முஜிதா அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

லிம்கா வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம்பெற  21 இன்ச் நீளமும் , 1 அடி அகலமும் கொண்ட மீன் தொட்டிக்குள் நீரை நிரப்பி, அந்த தொட்டிக்குள்ளாக சிறுமி முஜிதா கிட்ட தட்ட 8 நிமிடங்கள் மூச்சை அடக்கி கண்ட பெருண்ட என சொல்லக்கூடிய மிக கடினமான ஆசனத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.

9 வயது சிறுமியின் இந்த சாதனையை பலரும் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement