தமிழகம் Covid-19

மருத்துவர்களையும் விடாத கொரோனா..! தமிழகத்தில் 8 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு.!

Summary:

8 tamilnadu doctors corono test positive

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவருகிறது. அதேநேரம், கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்துவருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தற்போதுவரை 7,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 249 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 969 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதில் 4 பேர் அரசு மருத்துவர்கள் என்றும் 4 பேர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


Advertisement