தமிழகம்

சாதிப்பெயரை சொல்லி திட்டிய மாணவர்கள்.. முன்விரோதத்தால் மாணவனை தீயில் தள்ளிவிட்ட கொடூரம்.!

Summary:

சாதிப்பெயரை சொல்லி திட்டிய மாணவர்கள்.. முன்விரோதத்தால் மாணவனை தீயில் தள்ளிவிட்ட கொடூரம்.!

சாதிப்பெயரைச் சொல்லி சகமாணவர்கள், 6ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவனை தீயில் தள்ளி விட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகாமையில் காட்டுவிசிறி பகுதியில் வசித்து வந்த 6ஆம் பயின்றுவரும் மாணவனை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சாதி பெயரை சொல்லி சக மாணவர்கள் 3 பேர் திட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இது குறித்து கூறிய நிலையில், அவர்கள் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனால் தலைமையாசிரியர் 3 மாணவர்களையும் அழைத்து கண்டித்ததால், கோபமுற்ற மூன்று மாணவர்களுக்கும் சக மாணவர் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பவ தினத்தன்று மாணவனை மூவரும் தாக்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளி விட்டுள்ளனர். அப்போது குப்பைகளை எரிப்பதற்காக மூட்டப்பட்டிருந்த நெருப்பில் தள்ளி விட்டதால், எரிச்சல் தாங்க முடியாமல் அலறிய மாணவன் உடனடியாக அருகிலிருந்த குடிநீர் தொட்டியில் விழுந்துள்ளான்.

இதனால் சிறுவனுக்கு பயங்கரமான தீ காயங்கள் ஏற்பட்ட நிலையில், இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement