இதற்கெல்லாமாடா ஹோட்டல அடிச்சு நொறுக்குவீங்க!! போதை ஆசாமிகளால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்...6 drinkan persons asked mutton chakka in Solan miss

சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் சோழன் மெஸில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த உணவகத்திற்கு நேற்று ஆறு பேர் கொண்ட கும்பல் மது போதையில் மட்டன் சுக்கா இருக்கிறதா என்று வந்து கேட்டுள்ளனர்.

ஆனால் அப்போது மதிய நேரம் கடந்து விட்டதால் உணவு தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மது போதை கும்பல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Solan miss

மேலும் அந்த கும்பல் ஆபாச வார்த்தைகளால் பேசி இருக்கின்றனர். இதனால் அங்கு இருந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான ஹரிதாஸ் என்பவர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மது போதை கும்பல் ஹரிதாஸை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்து மேஜை நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.