தமிழகம்

ரேஷன் கார்டு இருக்கா..? ரேஷன் கார்டை காட்டினால் போதும் உடனே ரூ.50 ஆயிரம் பணம் கிடைக்கும்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

Summary:

50 thousand instant personal loan for per family card

ரேஷன் கார்டு இருந்தால் ரூபாய் 50,000 வரை தனிநபர் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தமிழக மக்களுக்கு கடந்த சில மாதங்களாக ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கிவருகிறது.

மேலும் ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் கொரோனா விவரண நிதியாக 1000 ருபாய் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து சிரமப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் குடும்ப அட்டையை காண்பித்து ரூபாய் 50,000 வரை தனிநபர் கடனாக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்த பணம் மூலம் மக்கள் தங்கள் தொழில் முதலீடு செய்து தங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement