விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்! பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

5 years old boy wallowed iron nail


5 years old boy wallowed iron nail


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் ஐந்து வயது மகன் விஸ்வநாத் என்ற சிறுவன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் இரும்பு ஆணியை விழுங்கியுள்ளான்.

இதனையடுத்து வலியால் துடித்த சிறுவனை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு உள்ள மருத்துவர்களால் ஆணியை எடுக்க முடியாமல் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர்கள் அனுமதித்தனர்.

young boy

அரசு மருத்துவமனையில் சிறுவனின் வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ததில் சிறுவன் விழுங்கிய ஆணி அவனது வயிற்றுப் பகுதியில் சிக்கி கொண்டதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறுவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றில் இருந்து ஆணியை எடுக்க சிரமப்பட்டு வருவதால் அவன் பெற்றோர் சோகத்தில் உள்ளனர். விளையாட்டாக சிறுவன் செய்த செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.