தமிழகம்

மொட்டை மாடிக்கு நடந்து சென்ற எல்.கே.ஜி படிக்கும் சிறுமி.! படிக்கட்டில் கால் தவறியதால் பரிதாப பலி.!

Summary:

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். கார் ஓட்டுநராக இருக்கும் விநாயகத்திற்கு தி

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். கார் ஓட்டுநராக இருக்கும் விநாயகத்திற்கு திருமணமாகி 5 வயதில் கீர்த்திகாஸ்ரீ என்ற மகள் உள்ளார். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளது சிறுமி கீர்த்திகாஸ்ரீ. தற்போது கொரோனா காலம் என்பதால் சிறுமிகளுக்கு பள்ளிகள் தற்போதுவரை திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் வீட்டிலிருந்த சிறுமி கீர்த்திகாஸ்ரீ தனது வீட்டின் மொட்டை மாடிக்கு படிக்கட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது படிக்கட்டில் சிறுமியின் கால்தவறி கீழே விழுந்துவிட்டாள். இதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி கீர்த்திகாஸ்ரீ, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமி கீர்த்திகாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement