தமிழகம் இந்தியா உலகம்

சீனா உடனான மோதலில் மரணமடைந்த 5 வீரர்கள்! தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர் பலி!

Summary:

5 soldiers killed in china border

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்திய ராணுவ மேஜர் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா உடனான மோதலில், இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதன்முறையாகும். 

இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் மரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் அவர் திடீர் தாக்குதலில் மரணமடைந்துள்ளார்.


Advertisement