வெளி மாவட்ட பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழில்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

வெளி மாவட்ட பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழில்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!


5 people arrested in nagarkoyil for illegal work

கன்னியாகுமரியில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வரும், இளம்பெண் உள்பட சிலரை கன்னியாகுமரி போலிசார் கைது செய்தனர். சர்வதேச சுற்றுலா தலமான  கன்னியாகுமரியில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் உள்ளன. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் அப்பகுதியில் சமீபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில்,சிபிசிஐடி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

arrest

இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண்களை இருசக்கர வாகனங்கள் மூலமாக இ- பாஸ் இல்லாமல் அழைத்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.