விபத்தில் சிக்கி உயிரிழந்த தெருநாய்! வயிற்றை கிழித்து பார்த்த மருத்துவருக்கு காத்திருந்த பெரும் ஆச்சரியம்!

5 little bubbies rescue from dead mother dog


5 little bubbies rescue from dead mother dog

வேலூர் மக்கான் சிக்னல் அருகே தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று நாயின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடியுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்ற நபர் அருகிலிருந்த நபர்களின் உதவியோடு நாயை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 

அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் நாயின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அந்த நாய் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இந்நிலையில் அந்த பெண் நாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த ஐந்து குட்டிகளையும் உயிருடன் மீட்டார். மேலும் பால் பாட்டில் ஒன்றை வாங்கி குட்டிகளுக்கு 
 பாலும் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ஐந்து குட்டிகளையும் தண்டபாணி தனது வீட்டிற்கு எடுத்துச்சென்று பராமரித்து வருகிறார்.

dead dog

இதுகுறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், நாய் உயிரிழந்த சில நிமிடங்களிலேயே ஆக்சிஜன் கிடைக்காமல் குட்டிகளும் இறந்து விடும். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குட்டிகளை உயிருடன் வெளியே எடுத்து விட்டோம். தற்போது குட்டிகள் நலமாக உள்ளது. மேலும் தெரு நாய்தானே என்று அலட்சியமாக விட்டுவிடாமல் அந்த நபர் செய்த காரியம் பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.