தமிழகம்

அக்கா மகனின் நண்பர்களை கண்டித்த தாய்மாமன் குத்திக்கொலை.. நடந்த பயங்கரம்..! பறிபோன உயிர்.!

Summary:

அக்கா மகனின் நண்பர்களை கண்டித்த தாய்மாமன் குத்திக்கொலை.. நடந்த பயங்கரம்..! பறிபோன உயிர்.!

அக்கா மகன் சரிவர பள்ளிக்கு செல்லாததால் அவரது நண்பர்களை தட்டி கேட்டபோது, அவர்கள் தாய்மாமனை கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எம்ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது அக்கா மகன் அகிலன் (வயது 15). இவர் அதே பகுதியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நண்பர்கள் என்று சில இளைஞர்களுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனையறிந்த மாணவரின் தாய் இதுகுறித்து தாய்மாமனிடம் தெரிவிக்க, அவர் சுரேந்தர் என்பவரிடம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து சுரேந்திரன், அவரது நண்பர் விக்னேஷ் போன்றோர் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இதில் 17 இடங்களில் கத்திக்குத்தால் காயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும், சுரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட கொலை செய்த 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement