தமிழகம்

புதுக்கோட்டையில் திடீரென்று அடுத்தடுத்து மோதிக்கொண்ட 7 கார்கள்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

Summary:

4people died in accident

 

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூரை அடுத்து நார்த்தாமலை சாலையில்  இன்று கோர விபத்து நடந்துள்ளது. அங்கு நடந்த விபத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று அப்பகுதி சாலையில் அடுத்தடுத்து கார்கள் வேன்கள் என 7 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு நடந்த கோரவிபத்தில், சம்பவ இடத்திலியே 4 பேர் பலி என கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement