கல்லூரி படிக்கும் வயதில் மகள் கூட இருந்தும், காம ஆட்டம் போட்ட 45 வயது தாய்.. 21 வயது இளைஞருடன் எஸ்கேப் ஆன சம்பவம்..

21 வயது கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட


45 years old women escaped with 21 years old boy

21 வயது கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது 45 வயதாகவும் இவருக்கு திருமணம் முடிந்து கல்லூரி படித்துவரும் ஒரு மகளும், 10 ஆம் வகுப்பு படித்துவரும் ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் கீதாவின் கணவர் பெயிண்டிங் வேலை பார்த்துவருகிறார். கணவனின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என்பதால், கீதா அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்நிலையில் கீதாவின் வீட்டிற்கு அருகே உள்ள குடும்பத்தினர் கீதாவிற்கு தேவையான உதவிகளை செய்துவந்ததோடு, அவரது குடும்பத்தில் ஒருவராக மாறியுள்ளனர்.

இந்நிலையில்தான் அந்த குடும்பத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவன் ஒருவருக்கும், கீதாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இரவு நேரங்களில் தனது பிள்ளைகள், கணவனை வெளியே அனுப்பிவிட்டு, கீதா அந்த இளைஞருடன் இரவு முழுவதும் வீடியோ காலில் பேசிவந்துள்ளார்.

இந்த தகவல் கீதாவின் மகளுக்கு தெரியவர, அவரும் தனது தாயாரை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை கேட்காமல் கீதா தனது கள்ள காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில்தான் ஒருநாள் கல்லூரி படிக்கும் இளைஞரை காணவில்லை. அதே நேரம் இந்த 45 வயது பெண்ணையும் காணவில்லை.

இருவரின் குடும்பத்தினரும் அவர்களை பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் மினி பஸ் ஒன்றில் ஏறி, நாகர்கோவிலுக்கு சென்று எஸ்கேப் ஆகி உள்ளது தெரியவந்தது.

கஷ்டப்படும் குடும்பத்திற்கு உதவிசெய்ய சென்று, கடைசியில் அந்த உதவியே உபத்திரவமாக மாறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.