தமிழகம்

ஏரியில் மூழ்கிய சிறுமிகள் உட்பட 3 பேர்! காப்பாற்ற முயன்ற பெண்ணும் சேர்ந்து மரணம்!

Summary:

4 girl died in water

தாம்பரத்தை அடுத்து உள்ளது மணிமங்கலம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த படப்பை அருகே கரசங்கால் ஏரியில் இரண்டு பெண்கள் உட்பட இரண்டு சிறுமியர்கள் துணி துவைக்க சென்றுள்ளனர். அவர்களில் தடுமாறி நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற மற்றவர்கள் முயன்றுள்ளனர்.

அப்போது, காப்பாற்ற முயன்ற மற்றவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்க முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. நான்கு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், ஏரியில் மூழ்கி இறந்த 4 பேரின் உடல்களையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement