தமிழகம்

பாவம் அந்த குழந்தைங்க!! சமைக்கும் போது தீயில் கருகி இளம்பெண் பலி!! அப்பா, அம்மா இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகள்..

Summary:

சமைக்கும்போது உடையில் தீப்பிடித்த நிலையில் இளம் பெண் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோ

சமைக்கும்போது உடையில் தீப்பிடித்த நிலையில் இளம் பெண் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த எடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா. இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையியல் ஹேமலதாவின் கணவர் ரகுராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் தனது மகன்களுடன் ஹேமலதா தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹேமலதா வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீ பற்றியுள்ளது. உடல் முழுவதும் தீ பற்றி எறிந்த நிலையில், ஹேமலதா தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார்.

உடனே ஹேமலதாவின் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரது உடலில் இருந்த தீயை அனைத்தநிலையில், சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஹேமலதா சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே அப்பா உயிரிழந்துவிட்டநிலையில், தாயின் ஆதரவில் வாழ்ந்துவந்த குழந்தைகள், தற்போது அம்மாவையும் இழந்து தவிக்கும் சோகம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Advertisement