தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
திடீரென பள்ளியில் மயங்கி விழுந்த 13 வயது சிறுமி... அலறி துடித்து மருத்துவமனை கொண்டு சென்ற பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஆனந்தராஜ் வீட்டிற்கு அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனை பார்த்து வந்த ஆனந்தராஜ் சிறுமியிடம் நட்பாக பழகி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆசை வார்த்தைகளை பேசி சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென ஒரு நாள் சிறுமி பள்ளியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறி போன சிறுமியின் பெற்றோர் சிறுமியை அழைத்து கொண்டு சென்று மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது ஆனந்தராஜ் பற்றி தெரியவந்துள்ளது.
அதனையடுத்து ஆனந்தராஜ் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே போலீசார் ஆனந்தராஜை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.