தமிழகம்

இளம் பெண்கள்தான் குறி..! ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் எடுத்து மூன்றுபேர் செய்த காரியம்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!

Summary:

3 persons involved young girls into prostitute police arrested

இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தாதகப்பட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகிய மூவரும் சேர்ந்து வறுமையில் வாடும் ஏழை இளம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட குடும்ப பெண்கள், கணவனை இழந்த பெண்கள் இப்படி இளம் பெண்களை குறிவைத்து, அதிக பணம் சம்பாதிக்க உதவி செய்வதாக கூறி அவர்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடவைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதற்கு சில பெண்கள் சம்மதம் தெரிவித்தாலும், சில பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணம் சம்பாதிக்க விருப்பம் தெரிவிக்கும் பெண்களை அந்த பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் சிலருக்கு விருந்தாக்கியதோடு, அதையும் வீடியோ எடுத்து, தொழிலதிபர்களிடமும் பணம் பறித்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும், லோகநாதனின் தந்தை, மனைவி உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் இந்த செயலுக்கு பின்னால் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து லோகநாதனின் தந்தையை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் லோகநாதனின் மனைவியை தேடி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன், கேமிரா உள்ளிட்டவரை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement