தமிழகம்

சென்னையை நடுங்க வைத்த சம்பவம்.! 3 பேர் சுட்டுக்கொலை.! கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.! போலீசார் தீவிர விசாரணை.!

Summary:

சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை தலில் சந்த், தாய் புஷ்பாபாய், மகன் ஷீத்தல் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சென்னையில் அவரது மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல், மகள் பிங்கியுடன் சௌகார்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று மாலை வெளியே சென்றிருந்த  தலில் சந்த்தின் மகள் பிங்கி, வீடு திரும்பியபோது, பெற்றோரும் சகோதரரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு கிடந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், தலில் சந்தின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Advertisement