தமிழகம்

கொரோனாவில் இருந்து தப்பிக்க குறுக்கு வழியாக ஊருக்கு போன குடும்பம்..! குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்..!

Summary:

3 members died near theni in forest fire

கொரோனாவில் இருந்து தப்பிக்க காட்டு வழியாக வந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரில் மூன்று வயது பெண் குழந்தை உட்பட மூன்று பேர் தீயில் கருகி உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் அணைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, கிருஷிகா விஜயமணி, மகேஷ், வஞ்சரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், ஆனந்த், மஞ்சு ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை அமலில் உள்ளதால் பேருந்துகள் ஏதும் இயங்கவில்லை. எப்படியாவது சொந்த ஊருக்கு போக வேண்டும் என திட்டமிட்ட அவர்கள், குறுக்கு பாதையான  பேத்தொட்டியில் ஊச்சலூத்து மலைப்பாதை வழியாக ராசிங்காபுரம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து 9 பேரும் திட்டமிட்டபடி லைப்பாதை வழியாக ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதில், மூன்று வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு தீயில் சிக்கியவர்களை மலை அடிவாரத்துக்கு கொடுன்வந்துள்ளனர். காட்டுத் தீயில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement