தமிழகம்

போர்வெல் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

Summary:

போர்வெல் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ்- இனித்தா தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்தநிலையில், சிறுவர்கள் இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள காலி நிலத்தில் விளையாடிட்டிள்ளனர்.

அந்த காலி நிலத்தில் போர் போடப்பட்டு அதிலிருந்து வெளியான சேர் கலந்த நீர் ஒரு பள்ளத்தில் தேங்கி இருந்துள்ளது. அந்த பள்ளத்தில் உள்ள சேற்றில் விழுந்து இரண்டு சிறுவர்களும் மூழ்கியுள்ளனர்.

விளையாட சென்றுவிட்டு நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினர் சிறுவர்களை தேடினர். அப்போது சிறுவர்கள் இருவரும் பள்ளத்தில் மூக்கியிருப்பதை பார்த்து, உடனே ஓடிச்சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Advertisement