தமிழகம்

இரண்டு வருட காதல்.! ஒரு மாத கர்ப்பம்.! கோபத்தில் காதலன் செய்த விபரீத செயல்..!

Summary:

2 years love, one month praganent kadalan murder him kadalai

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் லெட்சுமி திடீரென கர்ப்பமாகியுள்ளார். 

தான் கர்ப்பமானதை லெட்சுமி தனது காதலனான ராஜசேகரிடம் கூறியுள்ளார். அதற்கு ராஜசேகரன் இதற்கு நான் காரணம் இல்லை என கூறி மறுத்துள்ளார். அதனை அடுத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமான காதலன் ராஜசேகரன் காதலியான லெட்சுமியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். 

லெட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லெட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதனை அடுத்து போலீசார் ராஜசேகரன் மீது கொலை முயற்சியின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 


Advertisement