கழிவுநீர் தொட்டியால் மீண்டும் விபரீதம்... கூலி தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த பரிதாபம்..!2-mens-dead-by-drainage-smell

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை பெருங்குடியில் உள்ள காமராஜ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கூலி தொழிலாளிகளான தட்சிணாமூர்த்தி மற்றும் பெரியசாமி ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் இருவரும் பயங்கரமாக கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மயங்கியிருந்த இருவரையும் மீட்டதை தொடர்ந்து, பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

chennai

இதனால் உடனடியாக தட்சிணாமூர்த்தியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விஷவாயு தாக்குவதால் ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருவதால், அரசு இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.