"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
சிறுமியை வீடுபுகுந்து சீரழித்த மதபோதகர்.. கோவையில் பட்டப்பகலில் துணிகர செயல்..!
17 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாட்டி இரண்டு பேத்திகளையும் வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
இதனை கவனித்த அப்பகுதியை சார்ந்த மத போதகர் ஸ்டீபன்ராஜ், சிறுமியின் தங்கையை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் அதிகரிக்கவே, ஸ்டீபன்ராஜ் தப்பித்து சென்றதாகவும் தெரிய வருகிறது.
சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கவே, இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பாட்டி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் ராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.