கொடுமையின் உச்சம்... வட மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறதா தமிழகம்... 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.!17-year-old-girl-was-sexually-assaulted-by-three-people

வட மாநிலங்களில் நடைபெறுவதைப் போன்று கோவை மாவட்டத்தில்  நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சிறுமி  கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது நண்பருடன்  கோசலம்பாளையம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), பார்த்தீபன் (25)  ஆகியோர் சிறுமி மற்றும் அவரது நண்பரிடம் இங்கு ஏன் தனியாக இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளனர்.

tamilnaduபின்னர் அந்த சிறுமியின் நண்பரை அடித்து துரத்தி விட்டு சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் செல்வதாக கூறி தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆளில்லாத புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்தவர்கள் இதை வெளியே கூறினால் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கின்றனர்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து சிறுமியை செட்டிபாளையத்தில் இறக்கிவிட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த உண்மைகளை தனது பெற்றோரிடம் கூறி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகிறது.