தமிழகம்

தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விபத்து! 17 பேர் பலி!

Summary:

17 people died in Coimbatore


கோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கோவையில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் சிலரை மீட்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement