தமிழகம் Covid-19

ஒரே நாளில் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க உத்தரவு.! முதல்வர் அறிவிப்பு.!

Summary:

17 new corono cases in one day in tamilnadu

நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 17 உயர்ந்து தற்போது 67 ஆக உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றுவரை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும், 121 பேரின் ஆய்வு முடிவுகள் வரவேண்டியுள்ளது எனவும், கொரோனாவால் இதுவரை தமிழத்தில் ஒருவர் மட்டுமே உயிர் இழந்துள்ளார், 5 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோவுக்கு இதுவரை தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கான சிறந்த தடுப்பு மருந்து எனவும் முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்தில் 1.50 கோடி சாதாரண முகக்கவசங்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


Advertisement