தமிழகம்

அடுத்தடுத்து செத்து விழுந்த 17 ஆடுகள்..! காப்பாற்றப் போனவரின் மாடும் இறந்த சோகம்..! பதற வைக்கும் சம்பவம்.!

Summary:

17 goats and 1 cow dead after drink water in Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்திய 17 ஆடுகள் மற்றும் 1 மாடு உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை, அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மேய்ச்சலுக்காக அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த ஆடுகள் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை அருந்திய பிறகு ஒவொன்றாக மயங்கி விழுந்து இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரகாஷ் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அந்த வழியாக தனது மாட்டை அழைத்துக் கொண்டு வந்த ராமு என்பவர் ஆடுகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.

மாட்டை அங்கு விட்டுவிட்டு ஆடுகளை அவர் கவனித்தபோது ஆடுகள் அருந்திய அதே நீரை ராமுவின் மாடும் அருந்தியுள்ளது. நீர் அருந்திய சில நிமிடங்களில் ராமுவின் மாட்டும் மயங்கி விழுந்து இறந்துள்ளது.

ஆடு மற்றும் மாடு அருந்திய நீரில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement