தமிழகம் டெக்னாலஜி

டிக் டாக் மோகத்தால் 16 வயதில் அப்பாவான சிறுவன் - அதிர்ச்சி தரும் சம்பவம்!

Summary:

16 years old boy got father because of tik tok app

சென்னையில் உள்ள தொழில்பயிற்சி மையத்தில் தேனியைச் சேர்ந்த  16 வயதான சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். அப்போது சிறுவனுக்கு டிக் டாக் செயலின் மீது மோகம் அதிகம் இருந்துள்ளது. இதனால் அவன் டிக் டாக் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம்  சிறுவன் திடீரென மயமாகி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் பத்து மாதங்களாகியும் போலீசால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து சிறுவனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல்  செய்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற  உத்தரவை அடுத்து போலீசார்  சிறுவனின் செல்போன் ரகசிய எண்ணை வைத்து அவன் ஊத்துக்குளியில்  இருப்பதை  கண்டுபிடித்துள்ளனர்.

ஊத்துகுளிக்கு  விரைந்த போது, பெற்றோர் மட்டுமல்லாது போலீசாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.டிக் டாக் மூலம் செவிலியரும், சிறுவனும் நட்பாக பழக ஆரம்பித்து பின்பு காதலிக்க தொடங்கியுள்ளனர்.  இதனால் சிறுவனுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி ஊத்துக்குளியில்  குடும்பம் நடத்தியுள்ளார். இதில் இருவரும் கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ஆண்  குழந்தை பிறந்துள்ளது தெரியவந்தது.


Advertisement