அடக்கொடுமையே... காதலன் கொடுத்த குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்த 16 வயது சிறுமி... தைலமர காட்டிற்குள் நிகழ்ந்த சோகம்...

அடக்கொடுமையே... காதலன் கொடுத்த குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்த 16 வயது சிறுமி... தைலமர காட்டிற்குள் நிகழ்ந்த சோகம்...


16 years girl raped by her lover

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த அந்தரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(21) என்ற இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலியை அழைத்து கொண்டு காவேரி கரையோரம் இருக்கும் தைலமர காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார் ரங்கநாதன்.

காதலனுடன் தானே செல்கிறோம் என்று நம்பி சென்று அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலக்கி கொடுத்துள்ளார். இதனை அறியாத அந்த சிறுமியும் குளிர்பானத்தை குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

Rape

அதனையடுத்து ரங்கநாதன் தனது நண்பர்கள் 4 பேருக்கு போன் செய்து அழைத்துள்ளார். பின்னர் 5 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அதனை வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி இரண்டு மூன்று முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்களுள் கருத்து வேறுபாடு ஏற்படவே அதில் ஒரு நபர் வீடியோவை வாட்ஸ் ஆப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகவே சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

புகாரின் அடிப்படையில் ரங்கநாதன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.