தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவல்!

Summary:

15 people affected by corono in tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 12 ஆக இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த  இன்று மாலை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை சட்டம் விதிக்கபட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது நபர், 52 வயது  பெண் மற்றும் சுவிஸ் நாட்டிலிருந்து  திரும்பிய 25 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


Advertisement